
posted 14th February 2025
உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Image by Stefan Keller from Pixabay
உடல், உள நலத்தை பணக் கஷ்டம் தாக்குமா?
இன்றைய துரிதமாக இயங்கும் இவ் உலகில் மன மற்றும் உடல் நலனுக்கு நிதியானது ஒரு ஸ்திரத்தன்மையுடன் இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகின்றது. எம்மில் உருவாகும் மகிழ்ச்சியினை விலை கொடுத்து வாங்க முடியாது. பணக் கஷ்டத்தினால் உருவாகும் மன அழுத்தமானது மேலும், மேலும் ஆழப்பதிந்து பல பாதகமான உடல், உளத் தாக்கத்தினை அதிகப்படுத்தும். இதனால், வாழ்க்கையானது பலவிதத்திலும் தாக்கப்பட்டு சின்னாபின்னமாகி சுகாதார கவனிப்புகளுக்கே அடிமையாக வேண்டிய நிலைமை உருவாகலாம்.
பணக் கஷ்டம் தொடங்குமானல் அதனால் உருவாக்கப்படும் கஷ்டத்தினால் முக்கியமாக உருவாக்கப்படுவது மன அழுத்தமாகும். இதற்கு என்னவகையான காரணமாக இருந்தாலும், உதாரணமாக, கட்ட முடியாத பில்கள், அடைக்க முடியாத கடன்கள், வாழ்வாதாரத்திற்கு தேவைப்பட்ட செலவுகள், இறுதியாக நீண்டகால மன அழுத்தத்தினையும், மன உழைச்சலையும் உருவாக்கும். இதனை மேலும், வாசிக்க, moneyandmentalhealth.org
ஆராய்ச்சிகளின் அடிப்படையில் பண நெருக்கடியானது மன அழுத்தத்திற்கம், மன உழைச்சலுக்கும் பொதுவான காரணியாக உள்ளது. இவை உயர் இரத்த அழுத்தத்தையும் (high blood pressure), இதய நோயினையும் (heart disease) மற்றும் நோயெதிர்ப்புச் சக்தியில் பலவீனத்தையும் உருவாக்கப்படுவதற்கு மன அழுத்தமானது மோசமான உயிரியல் ஆரோக்கியத்துடன் தொடர்புடையதாக உள்ளது.
The Facts
மேலும், நிதி கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள் சாதாணமான வாழ்க்கையினை வாழமுடியாமல் வசதி குறைந்த வாழ்க்கை நிலையிற்குள் தள்ளப்படுகின்றார்கள். இதனால் இவர்கள், மலிவான, மேலும், ஆரோக்கியம் குறைந்த உணவு வகைகளைத் தெரிவு செய்யும் சூழ்நிலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப் படுகின்றார்கள். இவ்வாறான சூழ்நிலையினுள் அகப்பட்டவர்கள் பிரத்தியேகமாக செய்யக்கூடிய அல்லது செய்து வந்த அப்பியாசங்களையோ, வழக்கமான உடற்பயிற்சி செய்யும் வசதிகளையோ செய்ய முடியாமலும், சுகாதார பரிசோதனைகளை பின்போட வேண்டிய சூழலுக்கும் ஆளாக்கப்படுகின்றனர். இதனால், உடல் நிறை அதிகரிப்பதற்கும், அதனால் பின் வரக்கூடிய நீரழிவு நோய் போன்ற நீண்டகால, சுகப்படுத்த முடியாத நோய்களின் பாதிப்புகளுக்குள் உள்ளாகப்பட கூடுதலான சந்தர்ப்பங்கள் அமைகின்றன.
ஆரோக்கியமான சுகாதாரத்திற்கு தரமான சுகாதாரக் கவனிப்பு அவசியமாகின்றது. இவ்வாறான நிதி குறைவானவர்கள் மருத்துவ கவனிப்பையும், வழமையாகப் பாவிக்கும் மருந்துகளை தவிர்க்க வேண்டிய நிர்ப்பந்தங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள்.
இறுதியாக, அவசியமான நிதி நிலைமையானது எமது சுகாதாரத்துடன் ஒன்றுடன் ஒன்றாகப் பிணைந்துள்ளது. இதனால், இவ்வாறு தங்களால் தவிர்க்க முடியாத நிலைகளினை சரிப்படுத்துவதற்காக பலவிதமான புத்திகளையும், யுக்திகளையும் சொல்லக் கூடியதும், செயற்படுத்தும் தொண்டு செய்யும் நிறுவனங்கள் பல உள்ளன. அவைகளுடன் தொடர்பு கொண்டு உங்கள் சுகாதார நிலையினிலிருந்தும், நிதி நிலையிலிருந்தும் மீண்டு வரலாம்.
இந்த சூழ்நிலையிலிருந்து எவ்வாறு தப்பி வாழலாம் என்று அடுத்த பதிவில் கூறுகின்றோம்.
Will Your Financial Situation Affect Your Health?
Financial stability is a cornerstone of both mental and physical well-being in today's dynamic world. While happiness cannot be purchased, financial stress can significantly erode it, leading to adverse health outcomes. The interplay between financial strain and health is profound, affecting stress levels, lifestyle choices, and access to healthcare.
One of the most significant impacts of financial struggles is stress. Concerns about paying bills, managing debt, or affording necessities can lead to chronic stress and anxiety. Research indicates that financial difficulties are a common cause of stress and anxiety, which can lead to mental health issues such as depression and anxiety disorders. moneyandmentalhealth.org
Financial stress has also been linked to worse biological health, including high blood pressure, heart disease, and weakened immune function. The Facts
Furthermore, financial limitations can lead to poor lifestyle choices. Individuals with limited resources may opt for inexpensive, unhealthy food rather than nutritious meals. They may also forgo gym memberships, regular exercise, or preventive healthcare check-ups due to cost concerns. This lack of investment in health can increase the risk of obesity, diabetes, and other chronic illnesses.
Access to quality healthcare is another crucial factor. Those with lower incomes may delay seeking medical attention or skip necessary medications due to affordability issues. This can lead to the worsening of medical conditions and increased long-term healthcare costs.
Ultimately, financial well-being and health are deeply interconnected. Taking steps to improve financial literacy, budget wisely, and seek financial assistance when necessary can reduce stress and promote a healthier life. Prioritizing both financial and physical health is key to long-term well-being.